Posts

Showing posts from September, 2025

தன்னிறைவு - மோடியின் உரை முழக்கம்

Image
  ஜெய் ஹோ மோடி ஜி

விஷ்வ குரு பாரதப் பிரதமர் மோடியின் 75-வது ஆண்டு பூர்த்தி

Image
பாரதப் பிரதமர் மோடியின் 75- வது ஆண்டுப் பிறந்த நாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது . அவரது 11 ஆண்டுக் கால ஆட்சியின் சிறப்பைப் பற்றி வாய்மை மிகவும் பெருமையோடு நினைவு கூறுகிறது .   ' உழைக்கும் மோடி - உயரும் பாரதம் ' என்று ஒரே வரியில் மோடியின் ஆட்சியைப் பற்றி குறிப்பிட்டு பாரத மக்கள் அனைவரும் மோடியைப் பாராட்டிப் போற்றும் நிலையில் அவர் ஆட்சி சிறப்பாக அமைந்துள்ளது .  மோடியின் அரசியல் பயணம் 2001- ல் குஜராத் மாநில முதல்வராகத் தொடங்கியது . தொடர்ந்து 2014 வரை முதல்வராக பதவியினை 13 ஆண்டுகள் வகித்துள்ளார் . பிறகு பாரதீய ஜனதா கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளராக களம் இறங்கி 2014- ல் பாரதப் பிரதமராகப் பதவி ஏற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியில் இருக்கிறார் . அவரது 11 ஆண்டு கால ஆட்சியில் பாரதம் வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்துள்ளது . தன்னிறைவு என்ற தாரக மந்திரம் தான் பாரத தேசத்தை ஒரு வளர்ந்த தேசமாக ஆக்கி உள்ளது .  மோடியின் கடந்த 11 ஆண்டுக் கால ஆட்சியை ஒரு பறவைக் கண்ணோட்டத்தில் இங்கு பதிவு செய்ய விழைகிறோம் .  சுத்தம் சுகம் தரும் என்பார்கள் . மோடி பதவி ...

துர்கா பூஜை - ஆரம்பம் - 28 - 09 - நிறைவு - 02 - 10- 2025 (5 நாட்கள்

Image
  இந்த ஆண்டு ( 2025) துர்கா பூஜை செப்டம்பர் 28- ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2- ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.   துர்கா பூஜை என்பது இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம் , அசாம் , திரிபுரா மற்றும் ஒடிசா போன்ற பகுதிகளில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு முக்கிய இந்துப் பண்டிகை ஆகும். இது அன்னை துர்கா தேவியின் மகிமையையும் , தீமையின் மீது நல்லவை பெற்ற வெற்றியையும் கொண்டாடுகிறது.   துர்கா தேவி , மகிஷாசுரன் என்ற அரக்கனை அழித்து உலகைக் காத்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்தப் பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது.   இந்த விழா நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் , அதன் முக்கிய சடங்குகளும் கொண்டாட்டங்களும் கடைசி ஐந்து நாட்களுக்குள் அடங்கும்.   மகா சஷ்டி: விழாவின் முதல் நாள். இந்த நாளில் , துர்கா தேவியின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு , விழா ஆரம்பிக்கப்படும்.   மகா சப்தமி: இரண்டாவது நாள். இந்த நாளில் முக்கிய பூஜைகள் தொடங்குகின்றன.   மகா அஷ்டமி: மூன்றாவது நாள். இதுவே மிகவும் முக்கியமான நாள். இதில் குமாரி பூஜை மற்றும் சந்தி...

நவராத்திரி - 22 - 09 - 2025ல் தொடங்கி 01 -10 - 2025ல் முடிவு

Image
  நவராத்திரி என்பது ஒன்பது இரவுகள் எனப் பொருள்படும் ஒரு முக்கியமான இந்துப் பண்டிகை. இது பராசக்தியின் பல்வேறு வடிவங்களை வழிபடும் ஒரு திருவிழா. தீய சக்திகளை அழித்து நல்ல சக்திகள் வெற்றி பெற்றதைக் குறிக்கும் விதமாக இது கொண்டாடப்படுகிறது.  இந்த ஒன்பது நாட்களும் மூன்று முக்கிய பெண் தெய்வங்களை நாம் வணங்குகிறோம்:   முதல் 3 நாட்கள்: வீரத்திற்கும் , துணிச்சலுக்கும் உரிய அன்னை துர்கா தேவியை வழிபடுகிறோம்.   அடுத்த 3 நாட்கள்: செல்வத்திற்கும் , செழிப்பிற்கும் உரிய அன்னை லட்சுமி தேவியை வணங்குகிறோம்.   கடைசி 3 நாட்கள்: கல்விக்கும் , ஞானத்திற்கும் உரிய அன்னை சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம்.   ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி   ஆயுத பூஜை என்பது நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் (மகாநவமி) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தொழில் , கல்வி , வாழ்வாதாரத்திற்கு உதவும் அனைத்து கருவிகள் , வாகனங்கள் , இயந்திரங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்து , அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வழிபடுவார்கள்.   பத்தாவது நாள் தான் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் "வெற்றி நாள்" என்று ...

ஓணம் பண்டிகை - 05 -09 - 2025

Image
  ஓணம் என்பது தை மாதம் தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் பொங்கல் திருவாழாவைப் போன்றதாகும் . இந்த ஓணம்  இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய அறுவடைத் திருவிழா ஆகும். இது பத்து நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா . இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26- ஆம் தேதி தொடங்கி , செப்டம்பர் 5- ஆம் தேதி திருவோணத்துடன் நிறைவடைகிறது.   ஓணம் பண்டிகை அஸ்தம் நட்சத்திரத்தி தொடங்கி கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்துடன் முடியும். இந்த பத்து நாட்களிலும் பல்வேறு சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும். அதில் , திருவோணம் எனப்படும் பத்தாவது நாள் மிக முக்கியமானதாகும்.   இந்த பண்டிகை மகாபலி சக்கரவர்த்தியின் வருகையை நினைவு கூறுகிறது. மகாபலி ஒரு காலத்தில் கேரளாவை ஆட்சி செய்த ஒரு மன்னர். அவர் மிகவும் நல்லவரும் , தாராள குணம் கொண்டவரும் ஆவார். மக்கள் அவரை மிகவும் நேசித்தார்கள்.   விஷ்ணுவின் அவதாரமான வாமனர் , மகாபலியின் பெருமையைச் சோதிக்க பூமிக்கு வந்தார். வாமனர் மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்டார். மகாபலி அதற்கு சம்மதித்தார். வாமனர் முதல் அடியால் வானத்தையும் ...