துடைப்பைக் கட்சியை தூசிபோல் தூக்கி எறிந்த டெல்லி ஓட்டர்கள்
26 வருடக் காத்திருப்பிற்குப் பிறகு பிஜேபி டெல்லி சட்டசபையை ஆம் ஆத்மி கட்சியை வெற்றி கொண்டு கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. இது பிஜேபிக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 22 இடங்களில் வென்றாலும், அந்த கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலும் (சுமார் 4000 ஓட்டு வித்தியாசம்), அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் மனிஷ் சிசோடியாவும் (சுமார் 600 ஓட்டுக்கள்) தோல்வி அடைந்துள்ளது கட்சிக்கு ஒரு பெரும் பின்னடைவு என்பது மிகவும் கவலை தரும் விஷயமாகும். இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக பாரதப் பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் உள்ள பிஜேபி கட்சி தலைமை அகத்தில் பேசியதின் சாராம்சம் : ' இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு முதன் முறையாக டெல்லி மற்றும் டெல்லியைச் சுற்றி உள்ள மாநிலங்களில் பிஜேபி அரசு உள்ளது . இதன் மூலம் டெல்லியை ஒரு சிறந்த உதாரண நகரமாக மாற்றி அமைப்போம் . பல ஸ்மார்ட் நகரங்கள் டெல்லியில் அமைக்கப்படும் . ஆப்டா (AAPda - பேரழிவு ) விலிருந்து டெல்லி மக்கள் தங்களைக் காப்பாற்றி உள்ளனர். ஆப்டா முக்த் என்ற நிலையை டெல்லியில் உண்டாக்கியதால் இனி ஊழலற்ற, வளர்ச...