இலக்கிய கதம்ப மாலை - விமரிசனம்

திரு. பி . ஆறுமுகம் என்ற என் நண்பர் நான் அனுப்பிய ' இலக்கிய கதம்ப மாலை ' என்ற என் புத்தகத்தை முழுவதும் படித்து அது குறித்து ஒரு நீண்ட விமரிசனம் ( என்னிடம் கொண்ட அன்பினால் அது ஒரு வாழ்த்துரையாக அமையும் வாய்ப்பும் உண்டு என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன் ) எழுதி எனக்கு தபால் மூலம் அனுப்பி உள்ளார் . அதை இங்கு பிரசுரித்து அவருக்கு என் நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் . ஆறுமுகத்திற்கு என் நன்றிகள் பல . ஆசிகளோ அனந்தம் . ஆசிரியர் : ஜயந்திநாதன் இடது புறம் : பி . ஆறுமுகம் . வலது புறம் : ஆசிரியர் ஜயந்திநாதன் ( இடம் : திருவல்லிக்கேணியில் பாரதி நினைவு மண்டபம் ) பி . ஆறுமுகத்தின் விமரிசனக் கட்டுரை மடல் : மதிப்பிற்குரியவர் அவர்களே , தங்களது இலக்கிய கதம்ப மாலை நூல் கிடைக்கப்பெற்றேன் . என் இதய பூர்வமான நன்றிகள் . நூல் தொடர்பாகவும் , உங்கள் இளைய பருவத்தில் மலர்ந்த மலர்களை மாலையாக்கி இலக்கிய தாகத்தினால் எழுத்தில் வடித்து இத்தனை நாள் பாதுகாத்து தமிழன்னையின் ...