BAPS – ஹிந்து கோயில் அபுதாபி

அபுதாபியில் மோடியின் புனிதமான திருக்கரங்களால் திறக்கப்பட்ட கோவில் “ BAPS - (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) ஹிந்து கோயில் அபுதாபி” என்று பெயர் பெற்றுள்ளது. இது ஸ்ரீ ஸ்வாமி நாராயணருக்கான கோயிலாகும். BAPS என்பது ஒரு சமூக ஆன்மீக ஹிந்து மதக் கொள்கைகளைப் பரப்ப உருவான சத் சங்கமாகும். ஹிந்து மதத்தின் அடித்தளமாக விளங்கும் நான்கு வேதங்கள் தான் அந்த சங்கத்தின் கொள்கையாகும். ஹிந்து மதத்தைப் பரப்ப, அதன் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு முதல் குருவான பகவான் ஸ்வாமிநாராயணன் (1781 – 1830) 18-வது நூற்றாண்டில் மக்களிடம் உபதேசித்தார். அதன், பிறகு சாஸ்திரிஜி மஹாராஜ் (1865 – 1951) அவர்களால் 1907 ஆண்டு இந்த பாப்ஸ் சன்ஸ்தா உருவாக்கப்பட்டு ஹிந்து மக்களின் உருவ வழிபாட்டிற்கும், ஹிந்துமதச் சடங்குகள் செய்வதற்கும் உதவும் விதமாக இந்தியா மற்றும் பல உலக நாடுகளில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக அபுதாபியில் மோடியின் முயற்சியால் கட்டப்பட்டு திறக்கப்பட்டது தான் இந்த பாப்ஸ் அபுதாபி இந்துக் கோயிலாகும். கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்து கோவில் கட்டுவது க...