நமஸ்தே பிரான்ஸ் – நமஸ்தே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

நமஸ்தே பிரான்ஸ் – ஜூலை 13 – 14 2023 – இரண்டு நாட்கள் அரசுப் பயணமாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பை ஏற்று மோடி பயணம் . நமஸ்தே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – ஜூலை 15- ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவரும் , அபுதாபியின் ஆட்சியாளருமான ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் தின் அழைப்பை ஏற்று மோடி ஐந்தாவது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசுப் பயணம் . நமஸ்தே பிரான்ஸில் மோடியின் பயணத்தின் முக்கிய அம்சங்கள் : 1. பிரான்ஸின் தேசிய தினம் அல்லது பாஸ்டில் தினக் கொண்டாட்டம் ஜூலை 14- ம் தேதி பிரான்ஸ் பாரீசில் நடந்த விழாவில் மோடி கெளரவ விருந்தினராக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுடன் பங்கேற்றார் . . அந்தக் கொண்டாட்டத்தில் 269 வீரர்கள் – மூன்று ராணுவப் பிரிவான ஆர்மி , நேவி , ஏர்போர்ஸ் வீர்ர்கள் பாஸ்டில் தின அணிவகுப்பில் கலந்து கொண்டார்கள் . 100 வருடத்திற்கு முன் பிரான்ஸ் தேசத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்கள் பிரான்ஸ் மண்ணில் உயிர்த்தியாகம் செய்துள்ளனர் . இதில் முக்கிய பங்காற்றியவர்கள் பஞ்சாப்...