Posts

Showing posts from March, 2022

காவித் தாமரை மீண்டும் ஆட்சி – மஞ்சள் துடைப்பம் பஞ்சாபில் ஆட்சி

Image
      பாஜக உபி – 273 உத்திரகாண்ட் – 47   மணிபூர் – 32   கோவா – 20 பஞ்சாப் – 2 என்று மொத்தம் உள்ள 690 சட்ட சபை உறுப்பினர்களில் பாஜக வென்றது 374 சட்டமன்ற உறுப்பினர்கள் . இது 54% வெற்றியாகும் . பஞ்சாபில் பாஜக வெறும் 2 இடங்களைப் பெற்றும் 690- ல் பாதியான 345- இடங்களுக்கும் மேலாக 29 இடங்கள் அதிகமாக வென்றது குறிப்பிடத் தக்கது. அதுவும் 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளதை அந்தக் கட்சியின் ஒரு பெரும் ஆளுமையான வலுவான கட்சியாக நிலைநிறுத்தி உள்ள தைக் காட்டுகிறது . அதிலும் உத்திரப்பிரதேசத்தில் கடந்த 37 ஆண்டுகளில் ஆட்சி பீடத்தில் உள்ள கட்சி இரண்டாம் முறை ஜெயித்து சரித்திரம் படைத்துள்ளது .   பாஜக 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்த லில் மொத்தமுள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் , பாஜக 312 இடங்க ளையும் ,  இரண்டாவதாக வந்த கட்சி சமாஜ்வாதி கட்சி வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.   ஆனால் இந்த தேர்தலில் பாஜக 49 இடங்களை இழந்து , 273 இடங்களில் ஜெயித்துள்ளது . ஆனால் பாஜக பெற்ற ஓட்டு சதவீதம் 2017 பெற்ற 41.3% விட அதிகமா...