மம்தாவின் வீழ்ச்சி – பிஜேபியின் ஆட்சி

மம்தாவின் வீழ்ச்சி – பிஜேபியின் ஆட்சி மம்தா (66 வயது) சரித்திரத்தில் பி.ஏ. பட்டமும், பிறகு முஸ்லீம் சரித்திர வரலாற்றில் கல்கத்தா சர்வகலாசாலையில் தத்துவத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். அத்துடன் சட்டப்படிப்பிலும் பட்டம் பெற்றவர். மம்தா 1970-லேயே தமது 15-வயதில் காங்கிரசில் சேர்ந்தார். ஜயப்பிரகாஷ் நாராயணனின் கார் முன்னால் அவரை எதிர்த்து டான்ஸ் ஆடிய பொழுது, அவர் பலரது கவனத்தையும், மீடியாவின் வெளிச்சத்தில் மிகவும் வித்தியாசமான பெண் காங்கிரஸ் தலைவராகப் பார்க்கப்பட்டார். அதே போல் 1998-ல் லோக் சபாவிலேயே பெண் ரிசர்வேஷன் மசோதாவை எதிர்த்து சபாநயகர் அருகில் நின்று எதிர்ப்புத் தெர்வித்த ஒரு சமத்வாதி கட்சி எம்.பி.யின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினார். அவர் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளார். இருப்பினும், கல்கத்தா கிழக்கு தொகுதியை 1996, 1998, 1999, 2004 & 2009 வருடங்களில் வெற்றி பெற்றுள்ளார். மத்திய ரயில்வே அமைச்சராக அவர் காங்கிரஸ் மத்திய ஆட்சியிலும், பிறகு பிஜேபியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் மத்திய ஆட்சியிலும் பதவி வகித்து, முதல் பெண் மந்திரி ...