
மம்தா பானர்ஜியின் அரசியல் என்றால் அதில் அதிரடி திருப்பங்களும், அராஜக அடாவடிகளும், அரசியல் கொலைகளும், அனல்பறக்கும் சவால்களும் நிரம்பி வழியும். அவைகள் தான் அவரது பலமும், பலவீனமும் ஆகும். அவர் காங்கிரசில் இருந்த போதும் சரி, காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி பல ஆண்டுகளாக கோலோட்சிய இடது சாரிக் கட்சிகளின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து கடந்த 10 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தில் முதன் மந்திரியாக ஆட்சி செய்து, இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற தன் முழுப் பலத்தையும் காட்ட தேர்தல் களத்தில் உள்ள போதும் சரி, மம்தாவின் அணுகுமுறையில் அதிக மாற்றமில்லை என்பது தான் சரியான கணிப்பு. மம்தாவை இப்போது 3 இடங்களே சென்ற 2016 ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பெற்ற பிஜேபி எதிர்த்து ஆட்சியை அவரிடமிருந்து பறிக்க முயலுகிறது. காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகளும் மம்தாவுக்கு எதிராக களம் காண்கின்றனர் என்றாலும், சென்ற லோக் சபாவில் 2 எம்பிக்கள் என்பது 18 எம்.பி.க்களை வென்ற பிஜேபி தான் முக்கிய கட்சியாக தேர்தல் களத்தில் உள்ளது. மம்தாவின் திருணமுல் காங்கிரஸ் தனது 34 எம்.பி...