சென்னைக்கு பெரும் வரம் அந்த கடற்கரை , அதுவும் துறைமுகத்தை அடுத்து மிகபெரிய கொடை அந்த நீண்ட கடற்கரை . பிரிட்டானியர் காலம் வரை அதற்கு அந்நிய பெயர் இல்லை. சென்னை ஆளுநராக இருந்த ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன் என்பவர் அந்த கடற்கரைக்கு மெரீனா என பெயரிட்டார். மெரீனா என்பது லத்தீனில் ஒரு வார்த்தை , அந்த வார்த்தைக்கு அழகிய கடற்கரை , கடல் அருகே செல்லும் நீண்ட சாலை என பல பொருள் வரும் , கடல் தொடர்பான வார்த்தை அது . இன்றும் அவர்கள் கப்பல் படை மரைன் படை , சப் மரைன் படை என வருவது அப்படியே. ஆக கடற்கரைக்கே கடற்கரை என அறிவார்ந்த பெயர் சூடினான் அந்த கலெக்டர் , அதுவும் நிலைத்து தொலைத்துவிட்டது. 1881 ல்தான் அந்த பெயர் சூட்டபட்டது , 1900 களிலே அது அரசியல் களமாயிற்று. மன்னர்களின் ஆயுதபோராட்டம் தோற்றபின் அடுத்த போராட்டம் நாடெங்கும் மக்களை திரட்டி வெறும் 60 ஆயிரம் பேர் கூட இல்லாத பிரிட்டன் அரசை விரட்ட எழும்பிற்று. திலகர் , பாரதியார் , சுப்பிரமணிய சிவா லாலா லஜபதிராய் , நீலகண்ட பிரம்மாச்சாரி , சட்டர்ஜி , விபின் சந்திரபா...