Posts

Showing posts from November, 2020

பீஹார் சட்ட சபைத் தேர்தல் முடிவு – 10 – 11 – 2020

Image
  பீஹார் தேர்தல் மோடிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். சென்ற 2015-ம் ஆண்டுத் தேர்தலில் மோடி 2014 பிரதமராக ஆனதை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி, 2015 ஆண்டுத் தேர்தலில் தனது பரம எதிரியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் மெஹா கூட்டணி அமைத்து காங்கிரசுடன் சேர்ந்து 71 இடங்களில் அமோக வெற்றி பெற்று முதன் மந்திரியானார். ஆனால் துணை முதலமைச்சராக இருந்த லல்லுவின் இளைய மகன் ராஜேஸ்வி யாதவின் தலையீடு காரணமாக மீண்டும் 53 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க. உடன் சேர்ந்து ஒரு வருட லல்லு கட்சியுடன் உள்ள உறவை உதறித் தள்ளி மீண்டும் ஆறாவது முறையாக – மூன்றாவது தொடர் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு முதன் மந்திரியானார். ஆகையால் 2005, 2010, 2015 & 2020 என்று நான்கு சட்டசபைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து இப்போது ஏழாவது முறையாக முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்துள்ளார்.  பீஹாரில் 18 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் கிருஷ்ண சின்ஹா. தற்போது முதல்வராக 14 ஆண்டுகளுக்கு மேல் இருந...

கந்த சஷ்டி விரதம் – 15 – 11 – 2020 முதல் 6 நாட்கள்

Image
  கந்த சஷ்டி விரதம் – 15 – 11 – 2020 முதல் 6 நாட்கள் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா வரும் 15 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது . காப்புக்கட்டும் நிகழ்வைத் தொடர்ந்து 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வேல் வாங்குதல் மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்வுகள் திருவிழாவாக நடைபெறும் . சூரசம்ஹாரம் கந்த சஷ்டி விரதத்தின்   ஆறாவது கடைசிநாளில் நடைபெறும் . அடுத்த நாளில் முருகன் – தெய்வயானை , வள்ளி திருமண விழா நடைபெறும் . கொரோனாவினால் இந்த வருடம் நடக்கும் திருவிழாக்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை . நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம் , மாயை , கன்மம் , காமம் , பேராசை , செருக்கு , மயக்கம் , தற்பெருமை ஆகியவற்றை விடுத்து பல நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது . ஸ்கந்த புராணம் சிவபிரானின் மூன்றாவது கண்ணிலிருந்து முருகன் பிறந்து , பார்வதி தேவியிடம் வேல் பெற்று , தேவர்களை சிறைபிடித்து அசுர சாம்ராஜ்யத்தை நடத்திய மூன்று அசுரர்களான சூரபத்மன் , சிங்கமுகா சூரன் , தாரகா சூரன் ஆகியவர்களை முருகன் வத...