Posts

Showing posts from November, 2019

காவிக்காவியமா திருக்குறள்?

Image
காவிக்காவியமா திருக்குறள் ? ஆக்கம் : பவித்திரன் திருவள்ளுவர் காவியை மதிக்கும் ஹிந்துவா ? என்பதை அவரது திருக்குறள்கள் மூலம் நிரூபிப்பது என்பது கடினமான காரியம் ஒன்றும் இல்லை . அதைவிட திருக்குறள் ஒரு காவிக்காவியம் – ஹிந்துமதத்தின் கொள்கைகளை ஏற்கும் சிந்தனைகளையும் , சிந்தாந்தங்களையும் தன்னடத்தே கொண்ட பல குறட்பாக்களைக் கொண்ட காவியம் என்பதை நிரூபிப்பதும் மிகவும் சுலபமான ஒன்று தான் . ஆகையால் , திருவள்ளுவரை சனாதன தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு ஹிந்துவாக – கடவுளை முழுமனதுடன் நம்பும் ஹிந்துவாக – அதில் விதிக்கப்பட்டிருக்கும் – தவம் , ஊழ் , மறுபிறவி , சொர்க்கம் , நரகம் , அழிவற்ற ஆத்மா , ஏழு பிறவி , யாகம் , துறவு , நிலையாமை , பிறவாமைஆகிய தத்துவங்களை குறிக்கும் குறட்பாக்கள் இருப்பதாலும் , ஹிந்துக் கடவுள்களான விஷ்ணு , லட்சுமி , யமன் , உலகளந்த வாமனன் , இந்திரன் , திருவடி தொழுதல் , வானோர் , அந்தணர் , தாமரைக் கண்ணான் ( திருமால் ) ஆகியவர்களை திருக்குறளில் விளக்கப்பட்டிருப்பதாலும் - ஏற்பது தான் திருவள்ளுவருக்கு நாம் செய்யும் தர்மம...