05-08-2019 - திங்கட் கிழமை - இந்திய சரித்திரத்தின் பொன்னான நாள்

05-08-2019 – திங்கட் கிழமை – இந்த நாள் இந்திய சரித்திரத்தில் ஒரு பொன்னான நாளாகும். அன்று தான் ஆர்ட்டிகிள் 370 இந்திய அரசியல் சட்டத்திலிருந்து நீர்த்துப் போகச் செய்த அற்புதத் திருநாளாகும். சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரின் தனித் தன்மை – தனி அரசியல் சட்டம் - தனிக் கொடி – என்பது ஒரு தற்காலிக நிலை என்று சொல்லி இந்திய மக்களை ஏமாற்றிய காங்கிரஸ் – மற்றும் சில எதிர்க்கட்சிகளின் கபட நாடகத்தை அசுர வேகத்தில் மோடி – அமித்ஷா ஆகியவர்கள் பார்லிமெண்ட் – ராஜ்ய சபா ஆகிய இரண்டு சபைகளிலும் இரு தினங்களில் – 5 & 6 ஆகஸ்ட் 2019 – நீண்ட நேரம் விவாதித்து, 2/3 அங்கத்தினர்களின் ஆதரவைப் பெற்று நிறைவேற்றி வெற்றி வாகை சூடி உள்ளார்கள். இது சாதாரண சாதனை இல்லை. 30-07-2019 அன்று முத்தலாக் தடைச் சட்டம் இரு சபைகளிலும் நிறைவேற்றி சாதனை படைத்த மோடி அரசு அதே வேகத்தில் பி.ஜே.பியின் நெடுநாளைய கனவான 370 நீக்கத்தையும் நிறைவேற்றி எதிர்கட்சிகளை நிலை குலைய வைத்துள்ளது. முதலில் ராஜ்ய சபாவில் ஆகஸ்ட் 5-ம் தேதியில் 370 & 35 A ஷரத்துக்கள் ரத்தான மசோதாவிற்கு 125 பேர்கள் ஆதரவாகவும், 61 பேர்கள் எத...