குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 – Citizenship Amendment Act (CAA) - 2019

குடியுரிமைச் சட்டம் இந்தியா சுதந்திரம் பெற்ற ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1955- ல் நிறைவேற்றப்பட்டது . இந்தியக் குடிமகன் என்பதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 1- ல் – 5- லிருந்து 11- வரையிலுள்ள ஆர்ட்டிகிள் வரையறை செய்யும் . அதற்கான விரிவான விதிகள் குடியுரிமைச் சட்டம் 1955- ல் காணப்படும் . இந்தச் சட்டம் 1986, 1992, 2003, 2005 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறைகள் திருத்தப்பட்டுள்ளன . இப்போது மோடி அரசால் கொண்டுவரப்பட்ட திருத்தம் 2019 அந்த குடியுரிமைச் சட்டத்தின் ஐந்தாவது திருத்தமாகும் . ஆகையால் இது ஏதோ மோடி அரசால் புதிதாகக் கொண்டுவரப்படும் சட்டம் போல் சித்திரிக்கப் படுவது தவறு . மேலும் 2003- ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்திருத்தம் ( இரண்டாவது திருத்தம் ) இந்திய குடிமக்களின் தேசிய பதிவு ஏடு (National Register of Citizens – NRC) இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும் . அதை அஸ்ஸாமில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951 அடிப்படையில் இந்த இந்திய குடிமக்களின் தேசியப்பதிவு நடத்தபட 2005 வருடத்தில் அப்போதைய அரசு உறுதி அளித்தும் அந்தச் செயல் சரிவர...