திண்ணைக் கச்சேரி

பொதுஜனம்: மோடி இந்தியாவின் வளர்ச்சிக்குப் பாடுபட்டாலும், மோடியை வருகிற 2019 லோக் சபா தேர்தலில் மீண்டும் வெற்றி அடையாமல் இருக்க எதிர்க்கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலில் போட்டி போட வியூகம் வகுத்துள்ளார்கள். இது ஒரு பக்கம் இருக்க, நகர மாவோயிஸ்டுகள் – நக்சலைட்டுகள் ஒன்றாகத் திட்டம் போட்டது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீமா கோரேகாவுங் என்ற இடம் மஹாராஷ்ரா பூனாவில் உள்ளது. அந்த இடத்தில் வெற்றித் தூண் ஒன்றை ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய கம்பனி மாஹர் என்ற தலித் இனத்தவர்கள் பங்கேற்று பேஷ்வா பைஜிராவ் II என்ற பிராமண இனத்துக் குறுநிலமன்னரை 1818 ஆண்டு வெற்றி பெற்றதற்கு அடையாளமாக நிறுவி உள்ளனர். அம்பேத்கர் அந்த வெற்றித் தூணை முதல் முதலாக 01-01-1927 அன்று பார்வை இட்டு, உரையாற்றிச் சொன்னார்:”மாஹார் என்ற தீண்டத்தகாதவர்களாக தலித்துக்கள்தான் ஆங்கிலப் படையில் சேர்ந்து பெஷாவர் உயர் குடிப்பிரமண இனத்தவர்களை வென்றுள்ளனர்’” இதன் மூலம் அம்மேத்கர் இந்த வெற்றித் தூண் தலித் இனத்தவர்களின் உயர் ஜாதியினரின் தீண்டாமைக் கொள்கைக்கு எதிராக போராடி வென்ற ஒரு வெற்றிச் சின்னம் என்பதாகத் தெரிவ...