யமுனா நதிக்கரையில் ஸ்ரீஸ்ரீரவி சங்கரின் உலக கலாச்சார திருவிழா

இந்திய கலாச்சாரம் என்பது மதம் , பக்தி , சங்கீதம் , நாட்டியம் , நாடகம் , பஜனை , பாடல்கள் என்று பலவிதமான பரிமாணங்களாக விரிந்து , பலவித வேற்றுமைகளிலும் ஒற்றுமையை உலகத்திற்கே பறைசாற்றி வருகிறது . ஸ்ரீஸ்ரீரவி சங்கரின் வாழும் கலையின் 35- வது ஆண்டு பூர்த்தியானதைக் கொண்டாட அதை உலக கலாச்சார திருவிழாவாக மிகவும் பிரமாண்டமாக நமது நாட்டின் பல கலாச்சாரக் குழுக்களுடன் , 155 தேசங்களிலிருந்து 33,000 கலைஞர்கள் பங்கேற்றுள்ளார்கள் . 1000 ஏக்கர் விஸ்தீரணமுள்ள யமுனா நதிக் கரையின் சமவெளிப்பரப்பில் 7 ஏக்கர் அளவில் மிகவும் பிரம்மாண்டமான மேடை அமைத்து விழா கோலாகலமாக மார்ச் 11 லிருந்து 13 வரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் வெற்றிகரமாக நடந்தேறி உள்ளதை ஒவ்வொரு தேசபக்தி உள்ள இந்தியனும் பெருமை கொள்ளலாம் . அதில் கலந்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையே 35 லட்சம் என்று கணக்கிடப்படுகிறது . அத்துடன் நம் மற்றும் பல நாட்டைச் சேர்ந்த 8,000 வாத்தியக்காரர்களுடன் , தெற்கு அப்பிரிக்காவிலிருந்து பங்கேற்ற 650 முரசு வாத்தியக்காரர்களும் இந்த விழாவினைச் சிறப...