Posts

Showing posts from 2012

“பாலம்” கல்யாணசுந்தரம்

Image
போற்றுவோம் பூச்செண்டால் ….. ( ஜி . வைத்தியநாதன் மின் அஞ்சல் செய்தியின் அடிப்படையில் ) “ பாலம் ” கல்யாணசுந்தரம் பெயர் : - பி . கல்யாண சுந்தரம் - “ பாலம் ” சமூக நலப் பணிக்கு அவர் உருவாக்கிய நிறுவனம் . பிறப்பு - ஆகஸ்ட் , 1953 - மேலக்கரிவலக்குளம் , திருநெல்வேலி . குடும்பம் : பிரம்மசாரி .  சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் . தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர் . தாய் தான் தமது தயாள குணத்திற்கு ஆசான் என்று தாயாரை ஆராதிப்பவர் . தமது உடலையும் கண்களையும் தானமாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு அர்ப்பணித்துள்ளார் . படிப்பு : கோல்ட் மெடலிஸ்ட் லைப்ரரி சயன்ஸ் பட்டம் . லைப்ரரியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழக முனைவர் பட்டம் . வேலை : 35 வருடங்களாக குமரகுருபர கலைக் கல்லூரி , ஸ்ரீவைகுண்டத்தில் லைப்ரரியன் . வேலையில் திறமை : லைப்ரரியில் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் எளிய உத்தியை கண்டு பிடித்துள்ளார் . இமயமலை அளவு அவரது சிறப்பு அம்சங்கள் : ·    ...

அணு உலை மின்சார உற்பத்தி அவசியமா ? ஆபத்தா ?

Image
புரபசர் ஹான்ஸ் - பீட்டர் டுயர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவர் ஜெர்மனியின் நோபல் பரிசு பெற்ற அணுமின் பெளதிக விஞ்ஞானி. அவர் அணுமின் ஆய்வுத்துறையில்  40 ஆண்டுகளாக தம்மை அர்பணித்துள்ளார். நமது அணு விஞ்ஞானியான மதிப்பிக்குரிய அப்துல்கலாம் மாதிரி அணுவைப் பயன்படுத்தும் துறையில் - அது சமாதானம் அல்லது ஆயுத பயன்பாட்டிற்குத் துறையில் - ஈடுபட்டுள்ளவர் இல்லை டுயர் என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். அவர் சென்னையில் சொற்பொழிவின் போது சொன்னவைகளின் சுருக்கம் -         “ மின்சார உற்பத்திசெய்யும் எல்லா அணு மின் உலைகளையும் உடனடியாக குப்பைக் கூடையில் தள்ளவும். “ சில ஆபத்துக்கள் இதில் இருக்கத் தான் செய்யும். அதை       சயன்ஸ் எதிர்க்கொண்டு சமாளித்து விடும் “   என்ற சில விஞ்ஞானிகளின் வாதம் ஏற்புடையதன்று. ஏனென்றால், மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணு மின் உலைகளின் உற்பத்திச் சங்கலி மிகவும் சிக்கலானதும், மிகவும் அதிக செலவை உண்டாக்கும் வகையிலும் அமைந்த ஒன்றாகும். அத்துடன், இந்த...

நிஜம் தானா ?

நிஜம் தானா ? ஆக்கம் - ஜயந்திநாதன் 1.       சிட்டுக் குருவி பச்சைக் கிளி நீலவானப் பருந்து - புத்தகத்தில் மட்டும் தானா அப்பா ? 2.       கேட்ட மகனை கணினியின் கூகுல் மஹா குருவின் ஆசிரமத்தில் சிஷ்யனாக நுழைய விட்டேன். 3.       அகமகிழ்வான் என மகிழ்ந்தேன். ஆனால்..... என் மகனே மீண்டும் கேட்டான் ஒரு கேள்வி - மீண்டும் நிழல் தானா ? நிஜம் இல்லையா ? 4.       பூமியின் வெப்பம் மனிதனையும் நிழலாக்கும் என்பதும் நிஜம் தானா ? 

பூமித்தாயின் பசுமைப் புரட்சிக் குரல்

பூமித்தாயின் பசுமைப் புரட்சிக் குரல் ஆக்கம் - எஸ். சங்கரன். பூமியின் பசுமை மரங்கள் காடுகள் மலைகள் ! கோடரி - கொலைவெறி வெடிகள் பூமிப் பாஞ்சாலையின் துகிலுரியும் துச்சானக் கூட்டங்கள் ! கைகளை உயர்த்தி பூமிப் பாஞ்சாலி கதறுகிறாள் ! கலியுகக் கண்ணன்கள் நாம் - கை கொடுப்போமோ ? காவு கொடுப்போமோ ? காலம் காத்திருக்காது - கடந்து விட்டால் - பூமி பொங்கி எழும் - பொசிங்கிப்போவோம் ! கலியுகக் கண்ணன்கள் கை கொடுப்பார்கள் - பசுமைப் புடவையில் பூமித்தாய் பூரிப்பாள்.