17-வது பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் உச்சி மா நாடு

மோடி பங்கேற்ற 6 -7 ஜூலை மாதம் 2025 நடந்த 17- வது பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் உச்சி மா நாடு & ஐந்து நாடுகளுக்கு 8 நாட்கள் அரசுப் பயணம் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரேசிலில் பங்கேற்பதற்காக அவர் பிரேசில் செல்லும் போது , அந்த பிரேசிலில் அரசுப் பயணம் மேற்கொண்டதுடன் இன்னும் 4 தேசங்களில் அரசுப் பயணம் , 7 நாட்கள் ஆகாய விமானப் பயணம் , 6 அயல் தேச நகரங்கள் , 4 அந்தந்த நாட்டுகளின் உயர் விருதுகள் , 3 பொது மேடைகளில் பேச்சுக்கள் , 2 இராத்தூக்கமில்லாத விமானப் பயணம் - ஆமாம் இது தான் பாரதப் பிரதமர் மோடியாகும் . 1. கானா ஆப்பிரிக்கா கண்டத்தில் 54 நாடுகள் உள்ளன. இந்தியா அதில் 46 ஆப்பிரிக்க தேசங்களில் தனது வெளியுறவு அலுவலகங்களை நிறுவி உள்ளது. இது ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் அதிகரித்து வரும் உறவுகளுக்கு ஒரு சான்றாகும் . மோடியை கானா நாட்டின் ஜனாதிபதி ஜான் டிரமானி மஹமா ஆக்ரா விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார் . இது ஒரு இந்தியப் பிரதமரின் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ...