ஆபரேஷன் சிந்தூரம்

ஆபரேஷன் சிந்தூரம் என்றால் இந்துப் பெண்கள் தங்கள் நெற்றியில் இடும் குங்குமத்தைக் காக்க எடுக்கப்பட்ட எதிர்தாக்குதலாகும். பஹல்காமில் முஸ்லீம் மத தீவிரவாதிகள் ஐவரால் 26 அப்பாவி சுற்றுலாப்பயணிகள் அவர்களின் மதம் ஹிந்து மதம் என்பதை உறுதி செய்ய குரானின் கலிமாவை ஓதச் சொல்லியும், அவர்களின் ஆடைகளை அவிழ்த்து 'அவர்கள் சுன்னத் செய்யாதவர்கள்' என்பதை அறிந்து - அவர்கள் ஹிந்துக்கள் என்பதை இந்த தீவிரவாதிகள் ஊர்ஜிதம் செய்த பிறகே துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்கள். 'எங்களையும் சுடுங்கள்' என்று சொன்ன அவர்களின் மனைவிகளிடம் ' உங்களை உயிரோடு விடுகிறோம் . போய் உங்கள் மோடியிடம் சொல்லுங்கள் ' என்று அந்த முஸ்லீம் மத தீவிரவாதிகள் மிகவும் கீழ்த்தரமாகச் சொல்லியிருக்கிறார்கள் . இந்த தீவிரவாதிகள் The Resistance Front (TRF) என்ற பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள். இந்தக் குழு பாகிஸ்தானில் செயல்படும் Lakshar-e-Taiba (LET) என்ற மிகவும் பகங்கரமான தீவிரவாத அமைப்பாகும். இந்தக் கொடூரச் சம்பவம் 22- ம் தேதி ஏப்ரல் பிற்பகல் சுமார் 2:15 மணி...