துடைப்பக் கட்சியின் தற்போதைய பொம்மை முதல்வர் அதிஷி சிங் மர்லினா
அரவிந்த் கெஜ்ரிவால் அவரது டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான முறைகேடு வழக்கில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் 155 நாட்களாக இருந்துள்ளார் . அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது . அந்த ஜாமீனில் இரண்டு முக்கிய நிபந்தனைகளை கோர்ட் விதித்துள்ளது . அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன : ஜாமீனில் இருக்கும் போது கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகத்திற்கோ , டெல்லி செயலகத்துக்கோ செல்ல முடியாது . அவர் அதிகாரப்பூர்வ கோப்புகளில் கையெழுத்திட முடியாது. இதன் காரணமாக கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி உண்டாகி, அவரும் ராஜினாமா செய்ய, 43 வயதே ஆன அதிஷி சிங் மர்லினா 21-ம் தேதி செப்டம்பர் 2024 அன்று பதவிப் பிரமாணம் எடுத்து எட்டாவது டெல்லி முதல் மந்திரியாகவும் - மூன்றாவது டெல்லி பெண் மு தல் மந்திரியாகவும் பொறுப்பேற்றுள்ளார் . பொறுப்பேற்றவுடன் அதிஷி செய்த முதல் பணி தனது குருவாகவும், கூடப்பிறவா மூத்த சகோதரனாகவும் மதிக்கப்பட்ட துடைப்பக் கட்சியின் முன்னாள் முதல் மந்திரி பெயில் கெஜ...