Posts

Showing posts from December, 2024

பாரதியின் அனைத்து இலக்கியப் படைப்புகள் வெளியீடு

Image
ரதியின் அனைத்து இலக்கியப் படைப்புகளையும்  வெளியிட்டு தமிழ்த்தாயின் ஆசியைப் பெறும் பாரதப் பிரதமர் மோடி இதன் இணைப்பு : https://www.youtube.com/watch?v=M-NQKA8cuoo டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியிலுள்ள தனது இல்லத்தில் 11-ம் தேதி  நடைபெற்ற விழாவில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகள் அடங்கிய 23 தொகுப்பு நூல்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். உடன் நூல்களைத் தொகுத்த சீனி விசுவநாதன் , அல்லயன்ஸ் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் சீனிவாசன் உள்ளனர். மோடி: பாரதியின் இலக்கியப் படைப்பு தமிழ் மொழியின் மிகப் பெரிய பொக்கிஷம்.     டிசம்பர் 11, 2024 தமிழ்த் தாய்க்கு ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது. அந்த தினம் மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் 143- வது பிறந்த தினமாகும் . நாடு முழுவதும் கொண்டாடப்படும் அதே வேளையில் நமது பாரதப் பிரதமர் தமது அரசு இல்லத்தில் பாரதியாரின் படைப்புகள் அனைத்தும் அடங்கிய 23 பாகங்களை ஒரு விழா எடுத்து வெளியிட்டுள்ளார் . அன்னை தமிழ்த் தாயின் பரிபூரண அருள் மோடிக்கு கிட்டி உள்ளதை தமிழ் உலகம் நினைத்துப் பெருமைப் படலாம் . மத்திய கலாச்​சாரத் துறை​யின் கீ...

18 வயது குகேஷ் டொம்மராஜு 18-வது உலக செஸ் சேம்பியன்

Image
குகேஷ் வெற்றியின் பின்னே அவனது பெற்றோர்களின் பங்களிப்பும் , தியாகமும் இருப்பதை இந்த சமயத்தில் குறிப்பிட வேண்டும் .  குகேஷின் தந்தையின் பெயர் டாக்டர் ரஜினிகாந்த் - அவர் ஒரு இ . என் . டி . சர்ஜன் . அவனது தாய் பத்மா குமாரியும் மைக்ரோ பயாலஜிஸ்ட் டாக்டர் .   பையனுடன் பல தேசங்களுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் குஷேனின் தந்தை தனது வேலையை ராஜினாமா செய்து தன் மகனுடன் கூடவே துணையாக இருந்து உதவி உள்ளார் . தன் மகனின் வெற்றியே தன் வாழ்வின் குறிக்கோளாக தாயும் - தந்தையும் உழைத்துள்ளார்கள் .   குகேஷின் வெற்றிக்கு 15- வது உலக செஸ் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின்  பயிற்சியும் . வழிகாட்டலும் முக்கிய அங்கம் வகிக்கிறது . விஸ்வநாதன் ஆனந்த இந்தியாவின் வருங்கால கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்க வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமி ( WACA) -யை ஆரம்பித்து அதில் குகேஷ் டி போன்ற நட்சத்திரங்களை உலகளாவிய வெற்றிக்கு உதவி செய்துள்ளார். ஆகையால் அவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.   வாய்மை இந்த 18- வது உலக செஸ் சேம்பியன் குகேஷ் தொம்மராஜுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்துகிறது .   பாரதம...

கார்த்திகை தீபம் - 13 - 12 - 2024 - வெள்ளிக்கிழமை

Image
  திருக்கார்த்திகை திருநாள் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் ஹிந்து பண்டிகையாகும் .  பரணி தீபம் : முதல் நாள் பரணி தீபம் காளிதேவியை வழிபட்டு ஏற்றப்படும் .  அண்ணாமலையார் தீபம்: இரண்டாம் நாள் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கோயிலிலும் திருவண்ணாமலையிலும் மஹா தீபம் ஏற்றப்படும் . விஷ்ணு தீபம்: மூன்றாம் நாள் ரோகிணி நட்சத்திரத்தில் வைணவர்களால் விஷ்ணு ஆலயங்களில் ஏற்றப்படும் .  நாட்டுக் கார்த்திகை: நான்காம் நாள் மிருக சீரிட நட்சத்திரத்தில் பெண்ணையும் , மருமகனையும் வீட்டுக்கு அழைத்து குடும்ப விழாவாகக் கொண்டாடுவார்கள் .  தோட்டக் கார்த்திகை: ஐந்தாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் வயல்கள் , தோட்டங்கள் , கிணற்றடிகள் ஆகியவைகளில் தீபங்களை ஏற்றி வழிபடுவார்கள் .  இந்த கார்த்திகை தீப விழாவின் முக்கிய நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதலாகும் .  சொக்கப்பனை என்பது பனை மரம் அதன் ஓலைகளால் ஆனதாகும் . பனை மரத்தை வெட்டி எடுத்து ஆலயத்தின் முன் வீதியில் நட்டு அதைச் சுற்றி பல பனை ஓலைகளைச் சுற்றி ...