ஏழுமலையான் கோயில் லட்டு நெய்யில் கலப்படம்
கலப்படம் என்றால் சாதாரண கலப்படம் இல்லை . ஏழுமலையான் கோயில் லட்டுக்கு உபயோகிக்கும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் , சோயா பீன் , சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருப்பதாக ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது . குஜராத்தில் உள்ள NDDB CALF என்ற லபராட்டரியில் ஜூலை 12- ம் தேதியில் நெய் சாம்பில்கள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு , அதன் அறிக்கை ஜூலை 23- ம் தேதி தேவஸ்தானத்திற்கு அளிக்கப்பட்டது . அந்த ஆய்வு அறிக்கையில் தான் திருப்பதி லட்டு தயாரிக்க உபயோகிக்கப்படும் நெய் கலப்படம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அனைத்து பாலாஜி பக்தர்களையும் உள்ளம் குமுற வைத்துள்ளது . அந்த அறிக்கைகளின் இரு நகல் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் பதில் ஆகியவைகள் உங்கள் பார்வைக்கு மேலே பிரசுரமாகி உள்ளது . லட்டு மற்றும் இதர தேவைகளுக்கு 5000 டன் நெய்யை திருப்பதி தேவஸ்தானம் வாங்க வேண்டும் . ஒவ்வொரு ஆறு மாதமும் டெண்டர் மூலம் 1400 டன் நெய்யிலிருந்து 2000 டன் நெய் வரை வாங்குகிறார்கள் . இதைக் கண்காணிக்க தேவஸ்தானத்தில் தனியாக ஒரு கமிட...