ஆகஸ்ட் 9, 2024 அன்றைய மமதாவின் இருண்ட தருணம்

31-வயது 'நிர்ப்பயா' என்ற பயிற்சி பெறச் சேர்ந்த டாக்டரின் உடல் ஆர்.ஜி.கார் மெடிகல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடலின் செமினார் ஹாலில் உயிரற்ற நிலையில் இருந்துள்ளது. அவரது போஸ்ட் மார்ட்டம் அறிக்கையின் படி அந்தப் பெண் டாக்டர் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு, அவரது உடல் உறுப்புக்கள் சேதப்படுத்தப்பட்டு - குறிப்பாக அவரது முகம், கழுத்து ஆகியவைகள் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளன. அவரும் கற்பழிக்கப்பட்டதும் அந்த அறிக்கை உறுதி செய்துள்ளது. அவர் ஒருவருக்கும் மேற்பட்டவர்களால் கற்பழிக்கப்பட்டாரா என்பதை அந்த அறிக்கை தெளிவு படுத்தவில்லை. இந்த இழி செயலைச் செய்தவன் என்று சஞ்சய் ராய் என்ற அதே ஹாஸ்பிடலில் வேலை பார்க்கும் ஒரு சிவிக் வாலண்டியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிவிக் வாலண்டியர் என்பது மமதா பானர்ஜியால் இளஞர்களுக்கு வேலை வாய்ப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகும். அப்படி வேலையில் சேர்ந்தவர்களின் குணாதிசயங்கள் குறைபாடுடையவைகள் என்பது தெரிந்த ஒன்றே. இது அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்பு என்பதை அறிய வேண்டும். இந்த சஞ்சய் ராய் எப்படிப்பட்டவன் என்பதை சி.பி.ஐ. இவ்வாறு த...