சித்தராமையாவின் சித்து விளையாட்டு

சித்தராமையாவின் சமீபத்திய சித்து விளையாட்டின் விவரங்கள்: ஜூலை 15 - கர்நாடகா மாநில தொழில்கள் , தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் வேட்பாளர்களின் வேலைவாய்ப்பு மசோதா , 2024 – கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தலைமையில் மந்திரிகள் ஒப்புதல். அந்த மசோதா வருகிற சட்ட மன்றத்தில் ஒப்புதலுக்கு கொண்டு வருவதாக முடிவாயிற்று. ஜூலை 17 – தொழிலதிபர்களின் எதிர்ப்பால், சித்தராமையா அரசு இந்த மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு. அந்த அறிவிப்பின் போது, தொழில் மந்திரி எம்.பி.பாட்டீல் விளக்கியது: ‘ஒரு குழு இந்த மசோதாவைத் தீவிரமாக ஆலோசித்து முடிவெடுக்கும். மேலும் இந்த தொழிற்சாலைகளில் கர்னடிகருக்கான இட ஒதிக்கீடு ‘ஒரு யோசனையே’ அன்றி சட்டமில்லை.’ இந்தியர்கள் இந்திய அரசியல் சட்டத்தின்படி அனைத்து இடங்களிலும் எந்தவிதமான தடங்களும் இன்றி வசிக்கவோ, படிக்கவோ, வேலையில் சேரவோ முடியும் என்ற உத்திரவாதம் உண்டு. இந்த உத்திரவாதம் தான் இந்தியா என்பது இந்தியர்களுக்காக, இந்தியர்களால், இந்தியர்கள் மூலம் சுதந்திரமாக வாழ வழிவகுக்கிறது....