உச்ச நீதி மன்றத்தில் உச்ச கட்ட அதீத அநீதிச் சொற்பிரயோகங்கள்

நீதி மன்றங்கள் எல்லாம் பொதுமக்களைக் காக்கவும், வழி காட்டவும், அரசியல் சாசனத்தின் ஷரத்துக்கள் அனைவராலும் பின்பற்றப் படவைப்பதும் ஆகிய அனைத்தும் அதன் கொள்கையாகவும், செயலாகவும் இருக்க வேண்டும் என்பது நியதியாகும். அதைச் செயல்படுத்தும் நீதிபதிகள் நேர்மை, பொறுமை, கோபம் கொள்ளாமை, இனிய சொற்கள் ஆகிய குணநலன்களைப் பெற்ற தூய உள்ளத்தினர்களாக இருக்க வேண்டியது நியதியாகும். ஆனால் சில நேரங்களில் சில உச்ச மன்ற நீதிபதிகள் இந்த நியதிக்குப் புறம்பாகச் செயல்படும் நிலையும் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் இரண்டு குறட்பாக்களை குறிப்பிடுவது சாலச் சிறந்ததாகப் படுகிறது. அந்த இரு குறட்பாக்கள் இதோ உங்கள் கவனத்திற்கு: 1. அதிகாரம் 10: இனியவை கூறல் குறள் 100: இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. பொருள்: இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது . 2. அதிகாரம் 13: அடக்கமுடைமை குறள் 127:...