கண்ணகியின் மதுரை எரித்த பிரம்மாண்ட பிழை

முன்னுரை: இந்த நீண்ட பதிவு எழுத பல உதவினாலும், சிலம்புச் செல்வரின் சிலப்பதிகார ஆய்வுரையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அந்த ஆய்வுரையைப் படிக்க விழைபவர்கள் மேலே உள்ள தலிப்பினைச் சொடுக்கிப் படிக்கவும். கண்ணகியின் கதையை இளங்கோவடிகள் என்பவர் சிலப்பதிகாரம் என்று தலைப்பிட்டு இயற்றிய இயல் இசை நாடகம் என்ற முத்தமிழும் கொண்ட ஐபெரும் காப்பியங்களில் இது ஒன்றாகும். (மற்றவை – மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி). இந்நூலில் இயல் இசை நாடகம் ஆகியவைகள் இருப்பதால், சிலப்பதிகாரம் நாடகக் காப்பிய மென்றும் புகழப்படுகிறது. அத்துடன் உரைப் பாட்டும் இசைப்பாட்டும் இடையிடையே இயற்றப்பட்டுள்ளதால், சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்னும் பெருமையையும் உடைத்து. இளங்கோவடிகள் ஒரு சமணமத்ததுறவி. அவர் துறவி ஆனதே தம் அண்ணாவான சேரன் செங்குட்டுவனுக்கு அரச பதவி கிடைக்காது – அது இளைவனான இளங்கோவிற்கே கிடைக்கும் என்று நிமித்தக்காரர் சொல்லவும் அதைப் பொய்யாக்க துறவு பூண்டு, தியாகச் செம்மலாகி, இளங்கோவடிகளானார். கண்ணகியின் கதையுடன் தொடர்புடையது மாதவியின் மகளான மணிமேகலையின் கதையாகும். அ...