Posts

Showing posts from September, 2023

வாழ்க்கைச் சுழல் - முதல் பாகம்

ஆசிரியர் முன்னுரை “வாழ்க்கைச் சுழல்கள்” என்ற தலைப்பில் தொடராக என் வாழ்வில் நிகழ்ந்தவைகளை நான் ஆசிரியராக இருந்து ஒவ்வொரு தமிழ் மாதமும் வெளிவரும் “வாய்மை” என்ற மின் அஞ்சல் வழி பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் முதல் பாகம் முற்றுப் பெற்று இரண்டாம் பாகம் தொடராக இன்னும் வெளி வந்து கொண்டிருக்கிறது.   ஆகையால் முடிவு பெற்ற முதல் பாகத்தை என் பிளாக் மூலமாக பிரசுரிக்க விழைகிறேன். அந்த முதல் பாகத்தின் கட்டுரை தான் இது. படிக்க ஆர்வம் மூட்டும் விதமாக அவைகள் அமைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தக் கட்டுரை ‘ஜெயந்திநாதன்’ என்ற என் புனைப் பெயரில் வெளியிடப்படுகிறது. - ஆசிரியர் வாய்மை   சமர்ப்பணம்   துணைவியாக தூணாக தூதாக துணிவுடன் துக்கத்திலும் சுகத்திலும் பங்கேற்று பணிபல ஆற்ற எப்பொழுதும் என்னுடன் இணைபிரியாத என் தர்ம பத்தினி வத்சலா சங்கரனுக்கு இச் சிறு நூல் சமர்ப்பணம்.   முன்னுரை: வாழ்க்கையைச் சாகரம் – சமுத்திரம் என்றே சொல்வார்கள். ‘சா – கரம்’ என்ற தொனி அந்த சம்ஸ்கிரத வார்த்தையில் இருப்பதைத் தமிழில் அர்த்தம் கொண்டால், சாவை ஒத்த சங்கடகங்களிலிருந...