தமிழகத்தின் தூய ஆட்சியின் விடி வெள்ளி அண்ணாமலை

தமிழகத்தின் தூய ஆட்சியின் விடி வெள்ளி அண்ணாமலை https://enmannenmakkal.com/ இந்த வருடம் 14- ம் தேதி தமிழக பிஜேபி கட்சியின் தலைவர் அண்ணாமலையின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 12 முக்கிய புள்ளிகளின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு தமிழகத்தில் தூய – தெய்வீக – ஆன்மீக – தமிழ் மணம் கமழும் பிஜேபியின் ஆட்சிக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். அவரது இலக்கு – 2024- ல் லோக் சபா தேர்தலுக்கு அதிக பிஜேபி எம்பிக்களை டெல்லிக்கு அனுப்புவது , 2026- ல் திமுக அரசை வீழ்த்தி பிஜேபி தனிபெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமரவைப்பது என்பதாகும். ஒரு லோக் சபா சீட்டு கூட தமிழகத்தில் இல்லாத பிஜேபி – வெறும் 4 எம்.எல்.ஏக்கள் சீட்டுக்களே சென்ற தேர்தலில் ஜெயித்த பிஜேபி கட்சியை அசுர வளர்ச்சி அடையச்செய்யும் – இலக்கு/இலட்சியத்தோடு அண்ணாமலை அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். அண்ணாமலை அரசியல் களத்தில் குதித்த பிறகு இப்போது ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக ஆட்சியின் அவலங்களை ஆணித்தரமாக பொது வெளியில் , மீடியாக்களில் , பல பேட்டிகளில் மிகவும் விரிவாக கடந்த பல மாதங்களாகச் சொல்லி வருகி...