அண்ணாமலையின் அதிரடி அரசியல் அரங்கம்

பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி பீடத்தில் அமர்த்தத் துடிக்கும் 38 வயது கொங்கு மண்டல கவுண்டர் இன வாலிபர் தமது மேலான ஐ . பி . எஸ் . பதவியையும் துறந்து மோடியின் அரசியலால் ஈர்க்கப்பட்டு , பிஜேபியின் தேசிய பொதுச் செயலாளரான பி . எல் . சந்தோஷின் ஏற்பாட்டில் – மோடி / அமித் ஷா ஆகியவர்களின் முழு ஆதரவுடன் அண்ணாமலை குப்புசாமி ஜூலை 2021 – லிருந்து பிஜேபியின் தமிழ் நாட்டின் மாநிலத் தலைவரானார் . மத்திய மந்திரியாக முருகன் நியமிக்கப்பட அந்தப் பதவி அண்ணாமலைக்கு அளிக்கப்பட்டது . ஜனவரி 28, 2021- ல் அண்ணாமலை பி . எல் . சந்தோஷிற்கு தான் ஆங்கிலத்தில் – காக்கிக்கு அப்பால் அடியெடுத்து வைக்கிறேன் – என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்தை அன்பளிப்பாக அளிக்கும் புகைப் படம் தான் மேலே பிரசுரமாகி உள்ளது . ‘ காக்கிக்கு அப்பால் அடியெடுத்து வைக்கும் ’ எண்ணம் மோடி இந்திய அரசியல் களத்தில் இறங்கி . பாரத தேசத்தை ஒரு வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக்க அயராது பாடு பட்டு உழைக்கும் அவரை தேச பக்தியில்லாத – சுயநலவாதிகள் இந்தியாவிலும் – ...