பாரதம் மேலும் மேம்பட மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்

பாரதம் 1947- ல் சுதந்திரம் அடைந்து இப்போது 76 வருடங்கள் கடந்து விட்டன . மோடி 2014 ஆண்டிலிருந்து கடந்த 9 வருடங்களாக பாரதப் பிரமராக ஆட்சி செய்கிறார் . மோடி பதவியில் அமர்ந்த முதல் ஆண்டிலேயே இந்தியாவில் வெட்டவெளியில் கழிப்பறைகளாகப் பயன்படுத்திய நிலையை மாற்ற இந்தியா முழுவதும் – கிராமம் , நகரம் என்ற பாகுபாடின்றி அரசின் மான்யத்தில் கழிப்பறைகள் கட்டி – குறிப்பாக பரதப் பெண்மணிகளின் உபாதைகளைப் போக்கி அவர்களின் நன் மதிப்பைப் பெற்றார் . அத்துடன் காஸ் சிலிண்டர் அடுப்பு – காஸ் சிலிண்டர் ஆகியவகைகள் கிடைப்பது மிகவும் அரிது . ஆனால் மோடி இந்தியா பூராவும் காஸ் அடுப்புகள் – காஸ் சிலிண்டர்கள் ஆகியவைகள் மிகவும் எளிதாகவும் , ஏழை எளியோருக்கு மான்யத்துடனும் கிடைக்க வழிவகுத்து , சமையல் செய்யும் பெண்களின் கண்ணீரைத் துடைத்தார் . நல்ல குடிநீர் வசதி வீட்டிலேயே பைப்மூலம் கிடைக்கவும் வழி செய்து அது நாடு முழுவதும் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது . அது மட்டுமல்ல . மின்சார வசதி இந்தியாவின் அனைத்து இடங்களிலும் – மலைப் பிரதேசங...