வல்லபாய் பட்டேலின் சாணக்கிய தந்திரம்

வல்லபாய் பட்டேலின் சாணக்கிய தந்திரம் – ஆக்கம்: பவித்திரன். தியாகம், நேர்மை, எளிமை, தேசபக்தி, விடுதலைத் தாகம் – என்றெல்லாம் போற்றுதற்கு வல்லபாய் படேல் மட்டும் இல்லை. அவரது மகளுக்கும் அதில் இடம் உண்டு. தம் பெயருக்கு இழுக்கு வரும் விதமாக பட்டேலே பத்திரிகை ஆசிரியர் கோயங்காவை ‘படேல் ஒரு பேடி – என்று தலப்புச் செய்தி போடு’ என்று ஹைதராபாத் ஒரு பாகிஸ்தானாக உருவாதைத் தடுக்க வேண்டி தன்னையே தாழ்த்திக் கொண்டு, பாரத தேசத்தைக் காத்த உத்தம புருஷர். அந்தச் செய்திக்கு முன் பட்டேலின் மகள் மணிபென் – நேரு சந்திப்பையும் அறிந்து கொள்வது நலம். இது முன்பே வாய்மையில் வெளியிடப்பட்டது தான் என்றாலும், அதை மீண்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவது அவசியமாகிறது. 1. மணிபென் – நேரு சந்திப்பு: மணிபென் படேல் சர்தார் வல்லாபாய் படேலின் மகள். கல்யாணம் செய்து கொள்ளாமல் தேச விடுதலைக்காக தன் அப்பாவுடன் இணைந்து போராடிய வீரப்பெண்மணி. 1990-ல் அவர் அமாதாபாஅத்தில் காலமானபோது அவருக்கு வயது 87. ஆனால் அவருக்கு மரியாதை செய்ய எந்தவொரு காங்கிரஸ் தலைவரோ, தொண்டரோ வரவில்லை. மணிபென் படேல் காந்தியடிகளின் ச...