மோடி சர்க்காரின் 20 லட்சம் கோடி நிவாரணம்

பொருளாதார நிபுணர்கள் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்படும் ஏழை – எளியோர்கள், தெருவியாபாரிகள், பல வெளி மாநிலங்களிலிருந்து கட்டிடம் மற்றும் பிற தொழிற்கூடங்களில் வேலை செய்ய வந்தவர்கள், சிறு- குறு தொழிற் கூடங்கள், பெரிய உற்பத்தி நிறுவனங்கள், விவசாயிகள், நடுத்தர நேர்மையாக வரிசெலுத்துவோர்கள், லாரி- ஆட்டோ – பஸ் ஓட்டுனர்கள் என்று அனைத்து மக்களும் பயன்படும் வகையில் இந்த மஹா பெரிய புரட்சிகரமான நிவாரணத் திட்டம் மோடி அரசு கொண்டு வந்துள்ளது என்று பாராட்டி உள்ளனர். ‘நாங்கள் மொத்த பொருளாதார உற்பத்தியில் 5% நிவாரணம் அளிக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால், மோடி அரசோ 10% என்ற அளவில் நாங்கள் கேட்டதற்கும் மேலே இரண்டு பங்கு அதிகமாக திட்டம் தீட்டி உள்ளார்கள். ‘இந்தியாவை சுய சார்பு நாடாக உருவாக்கும்’ மோடியின் இலட்சியக் கனவை நினைவாக்கும் திட்டங்களாகும். என்பது தான் ஒரு நேர்மையான மதிப்பீடாகும். இதற்கு ஐந்து முக்கிய காரணிகளை உணர்ந்து, அவைகளை மேற்கொண்டு, மேம்படுத்தி, இந்தியாவை ஒரு வலிமையான சுயசார்பு நாடாக உருவாக்க 130 கோடி மக்களும் உறுதி ஏற்க மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு ...