ஹிந்து நாளிதழின் கார்ட்டூன்

ஹிந்து நாளிதழின் கார்ட்டூன் – நேர்மையை அம்பால் குத்தி குருதி சிந்தவைக்கும் அவலம் பாரீர் – ஆக்கம் : பவித்திரன் ஹிந்து நாளிதழ் ஹிந்து தர்மத்தை ஆதரிக்காது . அது முஸ்லீம்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் குணம் கொண்டது . அதுவும் மோடி அரசு பதவி ஏற்ற பிறகு பிஜேபி அரசு கொண்டு வந்த எந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த – காலம் காலமாக எந்தமுடிவும் எடுக்காமல் ஆனால் அதே சமயத்தில் ‘ சட்டம் கொண்டு வரவேண்டும் . கொண்டு வருவோம் ’ என்ற காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் , டீடி மம்தா கட்சி ஆகியவைகள் ஓட்டு வங்கி அரசியல் செய்வதையும் மீறி – சட்டங்களைக் கடந்த ஆறு ஆண்டுகளில் கொண்டு வந்ததையும் ஹிந்து பத்திரிகை கடுமையாக குற்றம் குறைகள் சொல்லியே வந்துள்ளது . அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் – என்பதை பிஜேபி தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்டு மக்களிடம் ஓட்டுக் கேட்டே ஜெயித்துள்ளது . மற்ற கட்சிகள...