ரஃபேல் - திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்

வாசகர்: ரஃவேல் போர் விமானம் வாங்க முந்தைய அரசு பேசிப் பேசியே நாட்களைக் கடத்தியது. பத்து ஆண்டுகளாக எந்த உடன்படிக்கையும் செய்ய வில்லை. விமானம் வாங்க எங்கே இருக்கிறது பணம்? – என்று அப்போதைய மந்திரி ஏ.கே.அந்தோனி வெளிப்படையாகவே ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், மோடி 36 போர் விமானங்கள் – இடைத்தரகர்கள் இன்றி – இன்றைய கால கட்டத்தில் உள்ள அனைத்து திறனும் கொண்ட புதிய டெக்னாலஜியுடன் கூடிய விமானங்கள் – வாங்க முடிவெடுத்து வெற்றி கண்டுள்ளார். இந்த துரித நடவடிக்கையிலும் விமானங்கள் இந்த வருடம் செப்டம்பரிலிருந்து தான் இந்தியாவிற்கு வர இருக்கிறது. இது ஏதோ கடைக்குப் போய் ஒரு பொருள் வாங்குவது போல் இல்லை. அடிப்படை விமானம் ஒரு விலை – அதில் இந்தியாவின் குறிப்பிட்ட அதிநவீன அம்சங்கள் (India Specific Enhancement) சேர்த்து ஒரு விலை என்று ஒப்பந்தம் செய்த பிறகு தான் அதற்கு ஏற்ப தயார் செய்யப்படும். இதற்கு கால அவகாசம் ஆகும். அந்த கால கட்டத்தில் சில புதிய கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வந்தால் அதற்கான விலையையும் கொடுத்து, அதையும் சேர்க்க வைப்பது தான் நாட்டு நலனில் அக்கரை கொண்ட தலைவர்களின் கடமையாகும். ஏனென்றால்...