நம்பி நாராயணின் தர்ம யுத்தம் – கேரள போலீஸின் தேசத்துரோகம்

நம்பி நாராயணின் தர்ம யுத்தம் – கேரள போலீஸின் தேசத்துரோகம் 14-092018 – வெள்ளிக் கிழமை ஒரு சரித்திர நாயகனான நம்பி நாராயணனின் (வயது 76) தர்ம யுத்தம் வெற்றி அடைந்த நாளாகும். ஒரு தனி மனிதனாக தன்னை ‘தேசத்துரோகி – இஸ்ரோவின் முக்கிய ஆவணங்களை கோடிக்கணக்கான பணத்திற்காக விற்ற உளவாளி’ என்று குற்றம் சாட்டி அவருடன் அவரது சகாவான டி. சசிகுமாரன் ஆகியவர்களுடன் இரண்டு மாலத்தீவுப் பெண்கள், ரஷியன் விண்வெளி ஏஜென்சியின் இந்தியப் பிரதிநிதியான கே. சந்திரசேகர் (இவர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 14-ம் தேதி இறந்து போனார். 50,000 ரூபாய் வழங்கிய 14-ம் தேதி உச்ச நீதி மன்றத் தீர்ப்பை அறியாமலேயே இயற்கை எய்தினார்), இஸ்ரோ காண்ராக்டர் எஸ்.கே.ஷர்மா மற்றும் ஒரு தொழிலாளி (மொத்தம் 7 பேர்கள்) ஆகிய அனைவருக்கும் மே 2, 1996 அன்றே விடுதலை வாங்கி வெற்றி கண்ட தீரர் நம்பி நாராயணனாவார். 30 நவம்பர் 1994 அன்று கைதானார் நம்பி. 50 நாட்கள் ஜெயிலில் இருந்து 19-01-1995 அன்று பெயிலில் வெளி வந்தார். கேரள போலீஸ் விசாரணை சி.பி.யை.க்கு மாற்றிய பிறகு தான் பல உண்மைகள் வெளி வந்துள்ளன. மே 2, 1996 – எர்ணாக...