மார்கழி மாத மகத்துவம்

16 – 12 – 2017 – சனிக்கிழமை – திருப்பாவை – திருவெம்பாவை ஆரம்பம் 18 – 12 - 2017 – செவ்வாய்க்கிழமை - ஹனுமத் ஜெயந்தி 29 – 12 - 2017 – வெள்ளிக்கிழமை – வைகுண்ட ஏகாதசி 02 – 01 - 2018 – செவ்வாய்க்கிழமை - திருவாதிரை நோன்பு – ஆருத்ரா தரிசனம் மார்கழி மாத மகத்துவத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டு மென்றால், ‘மாதங்களில் நான் மார்க்கழி’ என்ற கிருஷ்ணனின் கீதை வரிகளே போதும். மார்கழி மாதம் திருப்பாவை – திருவெம்பாவை பாசுரங்களுடன் பிறக்கிறது. பொழுது புலரும் போதே, பெண்கள் ஒன்றாக ஒவ்வொருவரையும் எழுப்பியபடி நதி – குளம் ஆகியவற்றிற்குச் சென்று நீராடி – பெருமாளையும், சிவனையும் துதித்து அந்த மார்கழி மாதம் முழுவதையும் தெய்வ வழிபாடாக ஆன்மீதத்தையும், பக்தியையும் வீடு தோறும், வீதிதோறும் பரப்பி ஹிந்து தர்மத்தை நிலைநிறுத்துவார்கள். கிராமத்துப் பெரியவர்களும், சிறுவர்களும் மிருதங்கம், தம்பூரா, ஜால்ரா சகிதம் நாம சங்கீர்த்...