காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம்

காந்தியை சுட்டுக் கொன்றதற்கு கோட்சேவின் காரணம் எந்த வகையிலும் ஏற்புடையது அன்று . கோட்சேவின் தேச பக்தி தடம் புரண்டதால் ஏற்பட்ட விபரீதம் அவன் காந்திஜியைக் கொன்றான் . இது எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் , எந்தக் காரணத்தை முன் வைத்தாலும் அவைகளை மூர்க்கமாக எதிர்க்கத் தான் வேண்டும் . என்றாலும் , ஒரு சரித்திர நிகழ்ச்சியாக அவன் வாக்கு மூலத்தைப் படிக்கலாம் டெ ல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார். வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:- காந்தியின் கொள்கையால் நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று அவரின் கால்களுக்கு செருப்பாக இருக்க ஆசை பட்டு அவருடன் சேர்ந்தேன். "தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக...