இஸ்ரோவின் இமாலய வெற்றி

05-06-2017 – புதன் கிழமை இஸ்ரோவினால் ஜிஎஸ்எல்வி எம்கே 3 - டி1 (GSLV MkIII-D1) ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் டவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது இந்தியாவின் இமாலய சாதனையாகும். இந்த ராட்சத ராக்கெட் சுமார் 3 டன் அதாவது 3,000 கிலோகிராமிற்கும் அதிகமான எடையுள்ள GSAT-19 என்ற தகவல் தொழில் நுட்ப சாட்டலைட்டை அதாவது செயற்கைக் கோளை விண் வெளியில் பூமியிலிருந்து சுமார் 36,000 கி.மீ. தூரத்தில் கொண்டு சென்று அதன் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தியது. இந்த ராக்கெட் 4 டன் அதாவது 4000 கிலோகிராம் வரையிலும் எடையுள்ள சாட்டலைட்டுகளைச் விண் வெளிக்குச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். முன்பெல்லாம் இந்தியாவின் ராக்கெட்டினால் 2-3 டன் எடையுள்ள செயற்கைக் கோள்களைத்தான் விண்ணிற்கு அனுப்ப முடியும். ஆனால், இனிமேல் 4 டன் எடை வரையிலும் செயற்கைக் கோள்களை அனுப்பும் திறனை இந்தியா பெற்று விட்டது. இதன் மூலம். இந்தியா அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை அனுப்பும் திறன் கொண்ட உயர்மட்டக் குழுவில் 6-வது அங்கத்தினராக – அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் ஆகிய தே...