நீதிபதி கர்ணன் பூண்ட தலித் கவச அங்கி

நீதிபதி சின்னஸ்வாமி ஸ்வாமிநாதன் கர்ணன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 30-03-2009 நியமனமானார். அந்த தினத்திலிருந்து அவர் தாம் சார்ந்த நீதித் துறையைப் பற்றியும், தம் சக நீதிபதிகளைப் பற்றியும் குறைகூறி வந்துள்ளார். இதை அவர் மீடியா மூலம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு நீதிபதி பதவிக் கருப்புக் கோர்ட்டை விட, ஜாதி தலித் கவச அங்கியைத் தான் தம் பதவியில் மிகவும் விரும்பி அணிந்துள்ளார். அந்த தலித் கவசத்தை அவர் மிகவும் விரும்பத்தகாத வகையில் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதை கீழே உள்ள விவரமான அவரது செயல்கள் தோலுருத்துக் காட்டும் என்பது திண்ணம். நவம்பர் 2011 அன்று தாழ்த்தப்பட்ட ஜாதி தேசிய ஆணையத்தில், கர்ணன் ‘தாம் ஒரு தலித் என்பதால், சக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்னைத் துன்புறுத்தியும், தண்டித்தும் கொடுமைப் படுத்துகிறார்கள். என் வேலையிலும் குறிக்கிடுகின்றனர்’ என்று குற்றம் சாட்டி உள்ளார். இதற்குச் சான்றாக, கர்ணன் தன் சகநீதிபதியுடன் ஒரு கல்யாணத்திற்குச் சென்ற போது, அந்த சகநீதிபதி தமது காலை வேண்டுமென்றே என் ...