ஜம்மூ காஷ்மீர் செனானி - நஸ் ரீ சுரங்கப்பாதை

வீடியோ இணைப்பு: https://www.thequint.com/news-videos/2017/03/25/chenani-nashri-tunnel-in-jammu-and-kashmir ( குறிப்பு : இந்த சுரங்கப்பாதையைப் பற்றிய விபரம் மேலே இணைப்பைச் சொடுக்கி அதன் வீடியோ இணைப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும் . மிகச் சிறிய வீடியோ - கட்டாயம் பார்க்கவும் - ஆசிரியர் ) 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தச் சுரங்கப் பாதையின் நீளம் 9.2 கி . மீ . அது செனானி - ரஸ் ரீ ஆகிய இரு இடங்களை இணைக்கும் ஹிமாலயமலையின் சுரங்கப்பாதை . இதற்கு ஜூலை மாதம் 2011 அன்று ₹ 2,519 ரூபாய் செலவில் ஐந்து வருடத்தில் கட்டி முடிப்பதாக காங்கிரஸ் மன்மோஹன் சிங்கின் ஐக்கிய முற்போற்கு கூட்டணி அரசு சர்க்கார் அடிக்கல் நாட்டியது . மோடி அரசு பதவி வகித்தவுடன் அந்த கட்டுமானப் பணிகள் முடிக்கி விடப்பட்டு , அந்த சுரங்கப்பாதையில் உலகத் தரம் வாய்ந்த அளவில் பல நவீன பாதுகாப்பு நடவடிக்கைகள் , கேமராக்கள் , ரேடியோ , காற்றோட்டம் , தீ தடுப்பு , சிக்னல்கள் , தகவல் தொடர்பு மற்றும் மின் சாதனங்கள் அனைத்தும் தானாக இயங்கும் வகையில் கட்டப்பட...