அம்மா பெட்டக முத்துக்கள் தொகுப்பு: வாய்மை நிருபர் பவித்திரன்

1987 ஆண்டு எம் . ஜி . ஆர் . இறந்த போது , எம் . ஜி . ஆர் . உடல் வைக்கப்பட்டிருந்த வண்டியிலிருந்து எம் . ஜி . ஆரின் உறவினரான தீபன் என்ற இளம் நடிகரால் ஜெயலலிதா தள்ளப்பட்டார் . மார்ச் மாதம் 1985 ல் எம் . ஜி . ஆர் . உயிரோடு இருந்த போதே ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா சொன்னது : “ என்னிடமிருந்து என்னை மிரட்டியோ அல்லது தாக்கியோ ஒருவரும் எதையும் பெறமுடியாது . அப்படிப்பட்டவர்களின் செய்கைகள் என்னை மேலும் உறுதியாகவும் , வளைந்து கொடுக்காமலும் , விட்டுக் கொடுக்காமலும் ஆக்கிவிடும் . என் ஆதரவைப் பெற விரும்பினால் , அதற்கு ஒரே வழிதான் உண்டு : என்னிடம் பணிவாகவும் , என்னைப் புகழ்ந்தும் , அன்பாகப் பேசியும் , குரலில் இதமாகவும் இருக்க வேண்டும் .” எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவை தனது வாரிசு என்று கூறவில்லை . அவரது மறைவுக்குப் பிறகு , அவர் தான் அந்த இடத்தை பெற போராட வேண்டி வந்தது . ‘ எம் . ஜி . ஆர் . எனக்கு கட்சியில் அவருக்குப் பிறகு நான் என்று சொல்லி , என் அரசியல் வாழ்க்கையைச் சுலபமாகச் செய்ய வில்ல...