ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு - ஆணவமா? அவசியமா?

சங்கரராமன் கொலை வழக்கு - ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு - இந்த இரண்டு வழக்குகளும் தமிழக அரசின் ஆணவமான போக்கின் உச்ச கட்டம் என்பதுதான் நிதரிசன உண்மை . நவம்பர் 2004 சமயத்தில் சங்கராச்சாரிய ஸ்வாமிகள் ஸ்ரீஜயேந்திரர் ஜெயிலில் அடைபட்டிருக்கும் போது கூட , மீண்டும் அவர் ஜெயிலிருந்து பெயிலில் வெளியே வரக் கூடாது என்ற எண்ணத்தால் , ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் அவரைக் கைதி செய்ய தமிழக அரசால் உத்திரவு விடப்பட்டது . நவம்பர் 17, 2004 அன்று தமிழ் நாட்டு முதல் அமைச்சரான செல்வி ஜெயல்லிதா அவர்கள் சட்ட சபையில் தெரிவித்தது :’ ராதாகிருஷ்ணன் ‘ சோமசேகர கனபாடிகள் ’ என்ற புனைப்பெயரில் தன்னைப் பற்றி மிகவும் கடுமையான குற்றச் சாட்டுக்களை கடிதங்களாக எழுதியுள்ளார் என்று ஜெயேந்திரர் சந்தேகப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது . அதனால் ஜெயேந்திரர் அடியாட்களை நியமித்து , ராதாகிருஷ்ணனைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது .’ ஆனால் இதே புனைப்பெயரில் சங்கரராமன் ஜெயேந்திரரைப் பற்றிப் புகார் கட்டுரைகள் எழுதியுள்ளார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது . ஒரு புராதன மடத...