Posts

Showing posts from October, 2009

யாஞ்யவல்கியரின் விளக்கங்கள் எழுத்து: ஜயந்திநாதன்

Image
யாஞ்யவல்கியரின் விளக்கங்கள் எழுத்து: ஜயந்திநாதன் உட்டாலகா என்பவர் அருணாவின் மகன். அவர் மற்ற மாணவர்களுடன் மாத்ரா என்ற ஊரில் படன்கலா காப்யா என்பவரின் வீட்டில் குருகுல வாசம் செய்து, யாகங்களைப் பற்றி கற்றுக் கொண்டிருந்தனர். குருவான படன்கலா காப்யாவின் மனைவியை ஒரு கந்தர்வன் ஆக்கிரமித்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தான். இதை அறிந்த சிஷ்யர்கள் குருவின் உடம்பில் புகுந்துள்ள கந்தர்வனைக் கேட்டார்கள்: நீ யார்? குருவின் மனைவின் உடம்பில் புகுந்துள்ள அந்த கந்தர்வன் பதில் சொன்னான்: எனது பெயர் கபந்த அதர்வணன். இதைத் தெரிவித்து விட்டு, குருவிடமும் சிஷ்யர்களிடம் அந்த கந்தர்வன் மேலும் சொன்னான்:குரு காப்யா அவர்களே! சிஷ்யர்களே! இந்த உலகம், மற்ற உலகங்கள், எல்லா உயிர்கள் ஆகிய அனைத்தும் ஒரு மாலையைப் போல் ஒன்றோடொன்று இணைந்து இருக்கிறது. அந்த இணைப்பிற்கு உதவும் நூல் போல் இருக்கும் அது எது? குரு: கந்தர்வனே! உண்மையிலேயே அது எது என்று எனக்குத் தெரியாது. கந்தர்வன்: இன்னொரு கேள்வி கேட்கிறேன். அதற்காகவாவது, குருவோ அல்லது சிஷ்யர்களோ பதில் தெரிந்தால் சொல்லுங்கள். உலகம் அனைத்தையும் இணைக்கும் அந்த நூலை அறிந்தவன...

பிரஹதாரண்ய உபநிடதம் யாஞ்யவல்கியரின் விளக்கங்கள் எழுத்து: ஜயந்திநாதன்

யாஞ்கவல்கியர் பெண் மேதையான கார்க்கியை 'பிரம்மத்த்தைப்பற்றி மேலும் மேலும் கேள்விகள் கேட்கவேண்டாம்' என்று ஜனகர் அரசரின் சபையில் எச்சரித்தார். ஆனால், ஜனகர் சபையிலுள்ள பிராம்மணர்கள் கார்க்கியை மேலும் இரண்டு கேட்விகள் கேட்க அனுமதிக்கிறார்கள். உண்மையில் இரண்டு கேள்விகள் அல்ல. ஒரே கேள்வியே இரண்டு முறை கேட்கப்பட்டு, ஒரே பதிலும் இரண்டு முறை யாஞ்யவல்கியரால் சொல்லப் படுகிறது. இது கேள்வியின் முக்கியத்துவத்தைத் தான் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். பிறகு, யாஞ்கவல்கியரே பிரம்மத்தைப் பற்றி விஸ்தாரமாக விளக்குகிறார். பதிலைக் கேட்ட கார்க்கி முத்தாய்ப்பாக சொல்லுகிறார்: பிரம்மணர்களே! மஹா பாண்டித்யம் வாய்ந்த யாஞ்கவல்கியர் நம்மிடையே இருப்பது பெரும் பாக்கியமாகும். அவரை வணங்குவோம். பிரம்மத்தைப் பற்றி விளக்குவதில் அவரை உங்களில் யாரும் வெற்றி கொள்ள முடியாது. உபநிடத்தில் சொல்லப் பட்டவைகளை இப்போது பார்ப்போம். பிரம்மம் - யாஞ்கவல்கியரின் விளக்கங்கள் கார்க்கி: மதிப்பிக்குரிய பிராமணர்களே! யஞ்யவல்கியரிடம் இரண்டு கேள்விகள் கேட்க அனுமதி வேண்டுகிறேன். அந்த இரண்டு கேட்விகளுக்கும் அவர் சரியான பதில்களை அளித்து ...