உபநிடதத் தொடர்: பிரஹதாரண்ய உபநிடதம்
உபநிடதத் தொடர்: பிரஹதாரண்ய உபநிடதம்: யாஞ்யவல்கியரின் விளக்கங்கள் எழுத்து: ஜயந்திநாதன் கார்க்கி என்பவர் ஜனகர் சபையில் இருக்கும் ஒரு பெண் தபசி ஆவார். அவர் வாகாக்னு என்பவரின் மகள். கார்க்கி என்ற அந்தப் பெண் தபசி யாஞ்யவல்கியரிடம் சில கேள்விகளை ஒரு தொடராக ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்டாள். பதில் அளித்துக் கொண்டே வந்த யாஞ்யவல்கியர் பிரம்மத்தைப் பற்றியும் விளக்கக் கோரிய பொழுது, 'கார்க்கியே! தர்க்கத்தை மிகவும் நீடித்து எல்லாவற்றையும் கேள்விகளால் அறிய முயலவேண்டாம்!' என்று எச்சரிக்கும் நிலைமையை கார்க்கி உண்டாக்கி விட்டார். கார்க்கி - யாஞ்யவல்கியர் சம்பாஷணை விரிவாக கீழே உள்ளது. கார்க்கி: யாஞ்யவல்கியரே! இந்த பூமியில் உள்ள அனைத்து வஸ்துக்களும் தண்ணீரினால் ஒரு துணி நெய்யப்படுவதைப் போல் இணைந்து நெய்யும் பாவு-குறுக்கு நூலாகக் காணப்படுகின்றன. அப்படி என்றால் தண்ணீர் எதனால் இணைந்து காணப்படுகின்றது? யாஞ்யவல்கியர்: காற்றால். கார்க்கி: அப்படியென்றால், காற்று எதனால் இணைந்து காணப்படுகின்றது? யாஞ்யவல்கியர்: ஆகாய உலகங்களினால். கார்க்கி: ஆகாய உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன? யாஞ்யவல்கியர்: க...