வக்ஃப் திருத்தச் சட்டம் - 2025 அலசுவோம் & ஆராய்வோம்
வக்ஃப் என்பது ஒரு அரேபிய மொழிச் சொல். அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் - நிறுத்து, தடு என்பதாகும். இதன் மூலம் இந்த வக்ஃப் என்ற பதம் சொத்தை தனிநபரின் உரிமையிலிருந்து தடுத்து, பொது நலமான மசூதி, முஸ்லீம் மதப் பள்ளி, முஸ்லீம் அனாதை விடுதி ஆகியவைகளுக்கு நிரந்தரமான உபயோகித்திற்கு தானமாக அளிப்பதைக் குறிக்கும். இந்த வக்ஃப் சொத்துக்களை விற்கவோ அல்லது பிறருக்கு அளிக்கவோ முடியாது. ஆகையால் வக்ஃப் என்பது இஸ்லாம் மதத்தினர் தமது சொத்துக்களை - அது நிலமாகவோ , கட்டிடமாகவோ அல்லது பணமாகவோ - இருப்பதை தானமாக அளிப்பதாகும் . அந்த தானமாக அளிக்கபடும் நிலம் - கட்டிடம் ஆகியவைகள் தானம் செய்பவரின் சொத்து என்பதற்கான ஆதாரம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை . அதை அவர் அனுபவித்திருந்தாலே அதை வக்ஃபிற்கு தானம் செய்து விடலாம் . அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்குப் போட முடியாது . இந்த நிலை இந்தியாவில் வக்ஃப் முதன் முதலில் 12- ம் நூற்றாண்டிலிருந்து நடை முறையில் இருந்தாலும் , அதில் பல மாற்றங்கள் அவ்வப்போது ஏற்பட்டு உள்ளது . இந்த வக்ஃப் நடைமுறை முகமது கோரியால் ...