மோடி பாரதப் பிரதமராக மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி தனித்துப் பெரும்பான்மை பெறும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இருப்பினும் பிஜேபி மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் தோழமைக் கட்சிகள் 53 இடங்களில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் 293 இடங்களில் வெற்றி பெற்று மோடியும் மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக ஆட்சிப் பெறுப்பில் அமர்ந்து விட்டார். இரண்டு கிங்க் மேக்கர்களான தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், ஜனதா தால் யுனைட்டட் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாரும் மோடியை வெகுவாகப் புகழ்ந்து அவருக்கு மனப்பூர்வமான ஆதரவையும் தெரிவித்துள்ளனர். நிதிஷ் குமார் ஒரு படி மேலே சென்று, மோடியின் கால்களில் வணங்கவும் முற்பட்டுள்ளார். மோடியின் மந்திரி சபை சென்ற அவரது ஆட்சியில் உள்ளவர்களே பல முக்கியமான இலாக்காக்களைப் பெற்றுள்ளனர். இதிலிருந்தே மோடி முழுமையான பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது போல் தான் அரசியல் நிலவரம் இருக்கிறது. இதில் வரும் ஐந்து வருடங்களிலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது என்பதை முழுமையாக நம்பலாம். மேலும் சபாநாயகர் தேர்விலும் மோடியின் முடிவை நாங்கள் ...