லோக் சபா தேர்தல் திருவிழா – 2024

லோக் சபா 2024 தேர்தல் எழு கட்டங்களாக 19 ஏப்ரல் தொடங்கி 1 ஜூன் முடிய 42 நாட்கள் தேர்தல் விழா நடக்க இருக்கிறது. தேர்தல் முடிவுகள் 4 ஜூன் 2024 வெளியாகிவிடும். பிஜேபி தாமரை 370 இடங்களையும் மற்ற தோழமைக் கட்சிகள் 30 இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கினை முன் வைத்து தேர்தல் களம் இறங்கி உள்ளது. அதன் தேர்தல் கோஷமே – ‘அப் கி பார், என்.டி.ஏ.சர்க்கார், 400 பார்’ – மிகவும் வலுவுள்ளதாக இருக்கிறது. பிஹாரில் நிதிஷ் குமார் – புள்ளி இந்தியாவின் இதயமாக இயங்கியவர் – இப்போது மோடி அணியில் உள்ளார். தெலுங்கானா – ஆந்திராவிலும் மோடியை எதிர்த்து அரசியல் செய்து படி தோல்வியைத் தழுவி அரசியல் சன்னியாசியாகவே போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட சந்திரபாபு நாயுடு – சினிமா நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவான் கல்யாண் ஆகியவர்கள் இப்போது பிஜேபி அணியில். ஆந்திராவில் லோக் சபாவுடன் மா நில சட்டசபைக்கும் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த மூன்று கட்சிகளின் கூட்டணி தற்போது பதவியில் இருக்கும் முதன் மந்திரிக்கு சக்தி வாய்ந்த எதிரணியாக இருந்து அதனால் ஜகன் பதவி இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்ச...