மோடியின் 77-வது சுதந்திர தின விழாவில் ஆற்றிய எழிச்சி உரை

மோடி 2014 லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்று முதன் முறையாக புது டெல்லி செங்கோட்டையில் நமது பாரத தேசத்தின் மூவர்ணக் கொடியினை ஏற்றி முதன் முறையாக பாரதப் பிரதமராக உரையாற்றி பிறகு அடுத்த 2019 வருட லோக் சபா தேர்தலில் இன்னும் அதிக அளவிலான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவி வகித்து மீண்டும் நமது தேசியக் கொடியை ஏற்றி ஆறாவது முறையாக உரையாற்றி இப்போது அடுத்த லோக் சபா தேர்தல் வர இருக்கும் நிலையில் 10-வது முறையாக கொடி ஏற்றி ஒரு நீண்ட உரையை – 80 நிமிடங்களுக்கும் மேலாக – நிகழ்த்தி உள்ளார். அப்போது மோடி தனது உரையின் இறுதியில் மிகவும் ஆணித்தரமாகவும், அபரிமிதமான நம்பிக்கையுடனும் முழங்கிய வாசகம்: என்னை 2014 லோக் சபா தேர்தலில் அமோக வெற்றி அடையச் செய்தீர்கள். அப்போது நான் – சீர்திருத்தம், செயல், மாற்றங்கள் – என்ற மூன்று மந்திர வாக்குறிதிகளை அளித்து நாட்டின் முன்னேற்றத்திற்காக இரவும் – பகலும் ‘தேச முன்னேற்றம் தான் முதலும் முடிவும்’ என்று உழைத்ததைப் பார்த்து பாரத தேச மக்களாகிய நீங்கள் என்னை மீண்டும் அதிக இடங்களில் 2019 ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் வெற்றி பெறச் செய்தீர்கள். அடுத்த ஐந்து வரு...