தமிழகம் – தமிழ் நாடு – பெயரில் எழுந்த பிரச்சனை

சென்ற வருடம் ஏப்ரல் 6 – ல் நடந்த முடிந்த தமிழக சட்ட மன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மொத்த இடங்களான 234- ல் 125 இடங்களையும் அதன் மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் 34 இடங்கள் என்ற அளவில் மொத்தம் 159 இடங்கள் ( அதில் முக்கிய கட்சியான காங்கிரஸ் 18 இடங்கள் ) பெற்று அதுவும் திமுக தனியாக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் - தனிபெரும்பான்மைக்கு 118 இடங்கள் - 7 இடங்கள் அதிகம் பெற்று - திமுக ஆட்சி 12- வது தமிழக முதல் அமைச்சராக ஸ்டாலின் தலைமையில் அமைந்தது . திமுக தேர்தல் சமயத்தில் ஹிந்து மத வெறுப்பினை வெளிப்படையாகவே பல சமயங்களில் தெரியப்படுத்தி உள்ளது . கந்த சஷ்டி கவச எதிர்ப்பு , ஆண்டாள் அவதூறு , ஹிந்து மத எதிர்ப்பு என்று பல செயல்பாடுகள் உடன் பிறப்புகளால் வெளிப்படையாக வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் . ஆனால் ஓட்டு அரசியலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் – அவரது மகன் உதயநிதி ஆகியவர்கள் – தாங்கள் ஹிந்துக் கடவுளுக்கு எதிரிகள் இல்லை என்பதைக் காட்ட வேல் எடுத்து – அதைப் படம் எடுத்து ப...