மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து – இந்திய நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டார் மோடி

“ மத்திய அரசின் மூன்று புதிய சட்டங்களும் ஒரு விளக்கு வெளிச்சம் போல் மிகவும் தூய்மையானது . என்றாலும் , என்னுடைய நல்லது செய்ய நினைத்த செயல்கள் சில சிறிய எண்ணிக்கையில் உள்ள எனது விவசாய நண்பர்களை நம்பச்செய்ய எங்களால் முடியாது போனதால் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ” என்று தமது மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் செய்தியை வெளியிட்டபோது விளக்கி உள்ளார் . ‘ இனி நாம் வேளாண் சட்டங்களை புதிய கண்ணோட்டத்துடன் ஆரம்பிப்போம் . இந்தப் புதிய ஆரம்பத்துடன் நாம் முன்னேறிச் செல்வோம் . அதற்கு உதவியாக ஒரு கமிட்டியை மத்திய அரசாங்கம் அமைக்கப் போகிறது . அந்தக் கமிட்டி லாபகரமான தொழிலாக விவசாயத்தை உருவாக்கும் செயல் திட்டத்தை தீர்மானிக்கும் . இயற்கை விவசாயம் , நாட்டிற்குத் தேவையான அனைத்து விவசாயப் பொருட்களும் உள்ளூரிலேயே கிடைக்கும் அளவில் பயிர் விளைச்சல்களில் நிலத்தின் தன்மை – தரம் ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு மாற்றங்களை கொண்டு வருதல் , விவசாயப் பொருட்களின் நியாயமான கொள்முதல் விலைகளை நிர்ணயிப்பதில்...