கருப்பர் உயிர் முக்கியம்

கருப்பர் உயிர் முக்கியம் Black Lives Matter என்றால் கருப்பர் உயிர் முக்கியம் – அதாவது பாதுகாக்ககப் படவேண்டும் என்பது 21-வது நூற்றாண்டின் அமெரிக்காவின் போலீஸின் கருப்பினத்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் கொலைகளையும், போலீஸ் நிறவெறித் தாக்குதல்களையும் எதிர்த்து எழுந்த போராட்டமாகும். ‘கருப்பர் உயிர் முக்கியம்’, ‘என்னால் மூச்சுவிட முடியவில்லை’, ‘போலீஸ் நிதி உதவியை நிறுத்தவும்’ – என்ற அமெரிக்கர்களின் போராட்டக் கோஷங்கள் 25-ம் தேதி மே மாதம் போலீஸின் கொடூரமான தாக்குதலால் உயிர் இழந்த ஜார்ஜ் ஃபிளாய்டினை முன்னிறுத்தி யு.எஸ்., யு.கே., பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்ரேலியா என்று இந்தப் போராட்டம் பல நாடுகளில் பரவி கருப்பர்களுக்கு நீதி வழங்க தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். குறிப்பாக யு.கே. இதில் முன்னிலை வகிக்கிறது. மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ம் தேதி ஒரு பெட்டிக்கடைக்கு கறுப்பினரான ஜார்ஜ் ஃபிளாய்ட் சென்றார்.. சிகரெட் வேண்டும் என்று கேட்டு 20 டாலர் நோட்டை எடுத்து நீட்டவும் சிகரெட் கொடுத்தார். ஆனால் பிறகு கடைக்கார் ஜார்ஜ் கொடுத்த நோட்டு போலி டாலர் என்று தெரிந்தவுடன் காரில் உட்கார்ந்திர...